கடந்த சில நாட்களாக ஐ.நா. சபை கூட்டம் நடைபெற்றது. இதில் உக்ரைன் ஜனாதிபதி கலந்து கொண்டு உரையாற்றியுள்ளார்.
அப்போது, ஐ.நா.வில் இன்னும் ரஷ்யாவிற்கு இருக்கை கொடுத்திருப்பது குறித்து கேள்வி எழுப்பினார். மேலும், வெறுப்பு ஆயுதமாகும் போது, அது ஒரு நாடுடன் நிற்காது என எச்சரித்துள்ளார்.
இந்த கூட்டத்தில் கனடா, உக்ரைனுக்கு ஆதரவாக பேசியது. கனடா ஜனாதிபதி, எரிபொருள் மற்றும் உணவை ஆயுதமாக்குகிறது என ரஷ்யா மீது குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்த நிலையில் உக்ரைன் ஜனாதிபதி கனடா செல்கிறார்.கனடா செல்லும் அவர், இன்று அங்குள்ள பாராளுமன்றத்தில் உரையாற்றவுள்ளார்.
2022 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலை தொடங்கியது. அதன்பின் தற்போது முதன்முறையாக உக்ரைன் ஜனாதிபதி கனடா செல்கிறார்.
இதற்கு முன்னதாக வீடியோ கான்பெரன்ஸ் மூலம் கனடா பாராளுமன்றத்தில் உரையாற்றியுள்ளார்.