புதுச்சேரியில் மிகப்பெரிய டானாக வலம் வரும் அன்பரசு தனது மகன் பென்னி க்கு திருமணம் செய்து வைக்க முடிவெடுக்கிறார். அதன்படி பணம் கொடுத்து விருப்பமில்லாத பெண் ஒருவரை தேர்வு செய்கிறார். கடைசி நேரத்தில் அந்த பெண் ஓடிவிட, அவரது தங்கை சோஃபியாவை மணம் முடிக்க ஆயத்தமாகின்றனர்.
இதையறிந்த சோஃபியாபவின் காதலர் சதீஷ் , அன்பரசு கொடுத்த பணத்தை திருப்பி கொடுத்து கல்யாணத்தை நிறுத்தி சோபியாவை மீட்க நினைக்கிறார். இதற்காக அவர் திரட்டிய பணம் பேய் பங்களா ஒன்றில் மாட்டிக்கொள்கிறது.
இறுதியில் அந்த பணத்தை அவர் மீட்டாரா? இல்லையா? அந்த பங்களாவில் நடந்தது என்ன என்பது தான் படத்தின் மீதிக்கதை.
தேவையில்லாமல் எதையும் சேர்க்காமல், 3-4 குழுக்களை பிரித்து காட்சிய விதம், விறுவிறுப்பை சேர்த்தது, கேம் ஷோவை கச்சிதமாக காட்சிப்படுத்தி படத்தை அயற்சியில்லாமல் 2மணி நேரத்துக்குள் முடித்து கொடுத்துள்ளார் படத்தொகுப்பாளர் என்.பி.ஸ்ரீகாந்த். கலையாக்கத்தில் ஏ.ஆர்.மோகனின் உழைப்பு பளிச்சிடுகிறது.
மொத்தமாக கதையையோ, ஹாரரையோ எதிர்பார்க்காமல் அடல்ட் காமெடி, உருவகேலி வசனங்களில்லாமல் ஜாலியாக பார்த்து சிரிக்க படத்தின் பெரும்பாலான காட்சிகள் கைகொடுக்கின்றன.