இஸ்ரேல்- பாலஸ்தீன ஹமாஸுக்கு இடையேயான யுத்தம் காரணமாக ஆசிய சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரித்துள்ளது.
ஆசிய சந்தையில் தற்போது மசகு எண்ணெய் விலை 4 டொலர்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் (WTI) சந்தையில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெய்யின் விலை 88.39 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
இதேவேளை, பிரென்ட் (Brent) சந்தையில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெயின் விலை 86.65 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.