NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இஸ்ரேலில் உள்ள சகல பாடசாலைகளையும் மூட உத்தரவு!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் முன்னறிவிப்பு எதுவுமின்றி கடந்த சனிக்கிழமை திடீரென தாக்குதலை மேற்கொண்டது.

ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை அடுத்தடுத்து ஏவியதில், நூற்றுக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு பதிலடி தரும் வகையில், 48 மணிநேரத்தில் 3 இலட்சம் வீரர்களை இஸ்ரேல் குவித்துள்ளது. இதுவரை இல்லாத வகையில் விரைவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

1973ஆம் ஆண்டு யோம் கிப்பூர் போரின்போது, 4 இலட்சம் படை வீரர்கள் குவிக்கப்பட்டதே அதிக எண்ணிக்கையாக இருந்தது என டைம்ஸ் ஒப் இஸ்ரேல் செய்தி நிறுவனம் தெரிவிக்கின்றது.

இஸ்ரேல் மற்றும் காசா எல்லையில் ஏற்பட்டு வரும் தொடர் சண்டையில் 140 குழந்தைகள் உள்பட 800க்கும் மேற்பட்டோர் இஸ்ரேலில் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில், தி டைம்ஸ் ஒப் இஸ்ரேல் செய்தி நிறுவனம் வெளியிட்டு உள்ள செய்தியில், இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பயங்கரவாத குழுவினர் இடையே தொடர்ந்து நடந்து வரும் மோதலை முன்னிட்டு, இஸ்ரேல் முழுவதும் உள்ள அனைத்து பாடசாலைகளும் எதிர்வரும் நாட்களில் தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும் என இஸ்ரேல் பாதுகாப்பு படை அறிவித்துள்ளது.

இதுதவிர, நேதன்யாகுவுக்கு தெற்கே மற்றும் மத்திய நெகேவ் பகுதிக்கு வடக்கே வர்த்தக நடவடிக்கைகளுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. வெடிகுண்டு புகலிடங்களுக்கான வசதிகள் உடனடியாக கிடைக்குமென்றால் மட்டுமே வர்த்தக நடவடிக்கைகளை செயல்படுத்தலாம் என இராணுவம் அனுமதித்துள்ளது.

அதேபோன்று, இந்த பகுதிகளில் வெளியே 10 பேருக்கு கூடுதலாக ஒன்றுகூட தடை விதிக்கப்பட்டு உள்ளது. உள்ளரங்கங்களில் 50 பேருக்கு கூடுதலாக ஒன்றுகூடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles