இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவி சமரி அதபத்து அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள மகளிர் பிக் பேஷ் லீக்கில் விளையாடவுள்ளார்.
சமரி அதபத்து பிக் பேஷ் லீக் தொடரில் சிட்னி தண்டர்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளமை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சமரி அதபத்து இதற்கு முன்னர் 2019ஆம் ஆண்டு மெல்போர்ன் ரெனகட்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டு விளையாடியிருந்தார். அதன் பின்னர் பிக் பேஷ் லீக்கில் விளையாட சமரி அதபத்துவுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
எனினும் கடந்த இரண்டு ஆண்டுகளாக சமரி அதபத்து சர்வதேச கிரிக்கெட்டில் வெளிப்படுத்திய திறமைகள் மீண்டும் அவர் பிக் பேஷ் லீக்கில் விளையாடுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகளிர் பிக் பேஷ் லீக் தொடர் இம்மாதம் 19ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளதுடன், 22ஆம் திகதி சிட்னி தண்டர்ஸ் அணி 22ஆம் திகதி சிட்னி சிக்ஸர்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது.