(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
இலங்கையின் நகர்ப்புற மக்கள் தொகை 44.57 சதவீதமாக அதிகரித்துள்ளதாக தேசிய பௌதீக திட்டமிடல் திணைக்களத்தினால் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான அறிக்கையை தேசிய பௌதீக திட்டமிடல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் காமினி ஹேவகே, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவிடம் பாராளுமன்ற வளாகத்தில் வைத்து கையளித்தார்.
நகர் மற்றும் கிராம திட்டமிடல் சட்டத்தின் கீழ் தேசிய இயற்பியல் திட்டமிடல் துறைக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி இந்த கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இலங்கையில் நகரமயமாக்கல் தொடர்பாக கடந்த 2012ஆம் ஆண்டு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. மக்கள் தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பின்படி, நாட்டின் நகரமயமாக்கல் 18.2 சதவீதமாகும்.