NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கொழும்பின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம் நீர் விநியோகம் தடை!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

அம்பத்தல நீர் வழங்கல் மேம்பாட்டு எரிசக்தி பாதுகாப்புத் திட்டத்தினால் முன்னெடுக்கப்படும் அத்தியாவசிய மேம்பாட்டுப் பணிகள் காரணமாக கொழும்பின் பல பகுதிகளுக்கு சனிக்கிழமை (21) நீர் விநியோகம் நிறுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

அதன்படி, கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளுக்கு 21ஆம் திகதி சனிக்கிழமை மாலை 5.00 மணி முதல் மறுநாள் அதாவது 2023 ஒக்டோபர் 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும்.

நீர் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளமையினால் நீர் பாவனையாளர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை தவிர்க்க தேவையான நீரை உரிய நேரத்தில் சேகரிக்குமாறு தேசிய நீர் வழங்கல் சபை கோரிக்கை விடுத்துள்ளது.

Share:

Related Articles