6,200 ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தப்பட்ட காலணிகள் ஸ்பெயினில் உள்ள ஒரு குகையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில், மரக் கருவிகள் மற்றும் ஐரோப்பாவின் பழமையான பாதுகாக்கப்பட்ட கூடைகளின் தொகுப்புடன் 20 ஜோடிகளுக்கு மேல் செருப்புகள் கண்டுபிடிக்கப்பட்டன.
உலர்ந்த, நொறுக்கப்பட்ட புல்லில் இருந்து வடிவமைக்கப்பட்ட இந்த பழமையான செருப்புகள் சுமார் 6,200 ஆண்டுகளுக்கு முந்தையது என தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மேலும் தெரிவிக்கையில்,
வரலாற்றாசிரியர்கள் நவீன டேட்டிங் நுட்பங்களைப் பயன்படுத்தி இந்தக் கலைப்பொருட்கள் தோன்றிய நேரத்தை தோராயமாக மதிப்பிடவும், அவற்றை உருவாக்கியவர்கள் பற்றிய நுண்ணறிவுகளைப் பெறவும் செய்தனர். அதாவது கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களின் தொகுப்பு ஆரம்ப மற்றும் நடுத்தர ஹோலோசீன் காலத்தை சேர்ந்தது என ஆராய்ச்சியாளர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்த பொருட்கள் அனைத்தும், 9,500 மற்றும் 6,200 ஆண்டுகளுக்கு முந்தையது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.