NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பிரேசிலில் விமான விபத்து – 12 பேர் பலி!

பிரேசிலின் அமேசானாஸ் மாநிலத்தில் உள்ள என்விரா நகரத்துக்கு சிறிய ரக விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் அந்த விமானம் விபத்தில் சிக்கியுள்ளது.

அங்குள்ள ஏக்கர் மாநிலத்தின் தலைநகரான ரியோபிரான்சிகோ விமான நிலையத்தின் அருகில் அந்த விமானம் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து நொறுங்கியுள்ளது. இவ்விபத்தில் விமானத்தில் இருந்த ஒரு குழந்தை உள்பட 12 பேரும் பலியாகியுள்ளனர்.

விபத்துக்கான காரணம் தெரியாத நிலையில் இது தொடர்பாக விரிவான விசாரணைகளை மேற்கொள்வதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இவ்விபத்து பிரேசிலில் கடந்த 2 மாதங்களில் நடந்த 2ஆவது விபத்து என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த மாதம் நடந்த விமான விபத்தில் 12 பயணிகள் மற்றும் 2 விமான ஊழியர்கள் பலியாகினர்.

Share:

Related Articles