தனியுரிமை மற்றும் இணையப் பாதுகாப்புக் காரணங்களுக்காக அரசாங்கம் வழங்கிய அலைபேசிகளில் இருந்து சீனச் செய்தியிடல் செயலியான WeChat மற்றும் ரஷ்ய வைரஸ் தடுப்பு நிரலான Kaspersky ஆகியவற்றை கனடா தடை செய்துள்ளது.
அதன்படி, சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் மதிப்பீட்டின் பின்னரே இந்தத் தடை அறிவிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
கனடா நிதியமைச்சின் தலைவர் அனிதா ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அரசு அலைபேசிகளில் இந்த பயன்பாடுகளுக்கான அணுகலை அகற்றுவதன் மூலம் சைபர் பாதுகாப்பிற்கான ஆபத்து அடிப்படையிலான அணுகுமுறையை நாங்கள் எடுத்துக்கொள்கிறோம்’ என தெரிவித்துள்ளது.
கனடாவின் முடிவுக்குப் பதிலளித்த சீன வெளிவிவகார அமைச்சு, கனேடிய அரசாங்கம் தரவு பாதுகாப்பைப் பேணுதல் என்ற போர்வையில் உண்மையான ஆதாரம் இல்லாமல் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது தேசிய பாதுகாப்புக் கருத்தைப் பொதுமைப்படுத்துகிறது என தெரிவித்துள்ளது.