NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஹரஸ்பெத்த பகுதியில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் இளைஞரின் சடலம் மீட்பு…!

நுவரெலியா – இராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹரஸ்பெத்த பகுதியில் சுமார் 1000 அடி உயரம் கொண்ட தர்பனா எல மலை அடிவார பகுதியில் உடல் பாகங்கள் உடைந்து சிதறி உயிரிழந்த நிலையில் இளைஞர் ஒருவரின் சடலமமீட்கப்பட்டுள்ள சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சடலத்தை இராகலை பொலிஸார் நேற்று மாலை (02) மீட்டுள்ளனர்.

இவ்வாறு சடலமாக மீட்க்கப்பட்டவர் இராகலை – ஹரஸ்பெத்த பகுதியில் வசிக்கும் 24 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மேலும், சடலமாக மீட்கப்பட்ட குறித்த இளைஞன் தாய், தந்தையருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தினால் தன் உயிரை மாய்த்துக்கொள்வதாகக் கூறி வீட்டை விட்டு வெளியேறியுள்ளதுடன், அதன் பின் இவரின் பெற்றோர்கள் இராகலை பொலிஸ் நிலையத்திற்கு விரைந்து தனது மகன் மது அருந்திவிட்டு தங்களை தாக்கிவிட்டு கோபத்தில் வீட்டைவிட்டு சென்றதாக முறைப்பாடு செய்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று மாலை இளைஞரின் வீட்டாருக்கு வந்த தொலைபேசி அழைப்பிற்கமைய பொலிஸாரின் உதவியுடன் சடலத்தை மீட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் வலப்பனை நீதவான் நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ள பொலிஸார் இந்த சம்பவத்தில் உயிரிழந்த நபர் தன்னுயிரை மாய்த்துக்கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற சந்தேகத்தையும் தெரிவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன் தர்பனா எல மலை சுமார் ஆயிரம் அடி உயரம் கொண்டுள்ளது என தெரிவித்த பொலிஸார் இம் மலை உச்சியிலிருந்து இவ் இளைஞன் வீழ்ந்துள்ளமையினால் உடல் பாகங்கள் உடைந்து மரணம் சம்பவித்திருக்கிறது எனவும் தெரிவித்தனர்.

மேலும் சம்பவத்தில் உயிரிழந்த இளைஞரின் உடல் மரண விசாரணையின் பின் பிரேத பரிசோதணைக்காக நுவரெலிய மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன் மேலதிக விசாரணைகளை இராகலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles