நாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் பண்டிகைக் காலங்களில் இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் வைத்து நேற்றைய தினம் (05) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை எதிர்வரும் வரவு – செலவுத் திட்டத்தில் அத்தியாவசியப் பொருட்கள் பலவற்றின் விலைகளை குறைக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக மஹிந்தானந்த அளுத்கமகே குறிப்பிட்டுள்ளார்.