இஸ்ரேல் நாட்டின் மீது ஹமாஸ் போராளிகள் கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி, ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரொக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.
பின்னர் அந்நாட்டு எல்லைக்குள் அதிரடியாக புகுந்து, இசை திருவிழாவில் கலந்து கொண்டவர்கள் உட்பட எல்லை பகுதியில் தங்கியிருந்தவர்களை கடுமையாக தாக்கி வன்முறையில் ஈடுபட்டனர்.
ஹமாஸ் போராளிகளின் அதிரடி தாக்குதலில், 1400-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர்.
அந்த அமைப்பு 241 பேரை பணய கைதிகளாக சிறை பிடித்து சென்றுள்ளது என இஸ்ரேல் இராணுவம் உறுதிப்படுத்தியது.
போர் இடம்பெற்று வரும் நிலையில், காசா அருகே தமர் மண்டல சபையின் பகுதியில் 1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான முதல் பாடசாலை ஒன்று திறக்கப்பட்டுள்ளது.