உலகக்கிண்ண அரையிறுதி , இறுதிப் போட்டியின்போது மழை பெய்தால் என்னவாகும் என்ற கேள்வி பல கிரிக்கெட் ரசிகர்கள் மனதில் எழுந்துள்ள நிலையில், அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டி என இரண்டு போட்டிகளுக்கும் தலா ஒரு நாள் ரிசர்வ் நாள் ஒதுக்கப்பட்டுள்ளதாக ஐசிசி உறுதி செய்துள்ளது. எனவே, அரையிறுதி , இறுதி ஆட்டங்களில் மழை பெய்தால், அந்த போட்டி நாளை,மறுநாள் நிறைவடையும்.
இன்று (15) நடைபெறும் இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான அரையிறுதிப் போட்டியில் மழை பெய்தால் நாளை(16) நடைபெறும். அதே சமயம்,நாளை(16) நடைபெறும் தென்னாப்பிரிக்கா , அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான அரையிறுதிப் போட்டியில் மழை பெய்தால் ரிசர்வ் நாள் நவம்பர் 17ஆம் திகதியும், நவம்பர் 19ஆம் திகதி நடைபெறும் இறுதிப் போட்டியின் ரிசர்வ் நாள் நவம்பர் 20ஆம் திகதியும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர, ரிசர்வ் நாளில் கூட போட்டியின் முடிவு தெரியாவிட்டால், புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் அணிக்கு சாதகமாக இருக்கும். உதாரணமாக, இன்று நடைபெறும் போட்டி மழையால் நாளை ஒத்திவைக்கப்படுகிறது என வைத்து கொள்வோம். இந்த நிலையில் நாளைய போட்டியிலும் மழை குறுக்கிட்டால் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் அணியான இந்தியா இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும்.