கோப் குழுவின் தலைவர் ரஞ்சித் பண்டாரவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
நம்பிக்கையில்லாப் பிரேரணை எதிர்வரும் வாரத்தில் சபாநாயகரிடம் கையளிக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கலந்துரையாடல்கள் தற்போது இடம்பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அண்மையில் இடம்பெற்ற, ஸ்ரீலங்கா கிரிக்கெட் அதிகாரிகளுக்கும், கோப் குழுவுக்கும் இடையிலான கலந்துரையாடலின் போது, கோப் குழு தலைவரின் முறையற்ற நடவடிக்கையை அடிப்படையாக கொண்டு இந்த நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.