இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போர் ஒரு மாதத்துக்கு மேலாக நீடிக்கும் நிலையில், இரண்டு பள்ளிகள் மீது குண்டு வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஜபாலியா அகதிகள் முகாமில் ஐ.நா. சபை நடத்தும் அல்-பகுரா பாடசாலையில் ஏராளமானோர் தஞ்சம் அடைந்திருந்திருந்த நிலையில் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டு வீசியுள்ளன.
பாடசாலை கட்டிடம் இடிந்து விழுந்ததில் 50 பேர் பலியானதுடன் ஏராளமானோர் காயம் அடைந்துள்ளனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
மேலும் வடக்கு காசாவின் தால்-அல்-ஜாதார் பகுதியிலுள்ள பாடசாலை மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கிடையே மீதான தாக்குதலில் இடிபாடுகளில் பலர் சிக்கியுள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
சில நாட்களுக்கு முன்பு காசாவின் மிகப்பெரிய அகதிகள் முகாமான ஜபா லியா முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 200 பேர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ஐ.நா. நடத்தும் பள்ளியின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது போர்க்குற்றம் என்றும் ஐ.நா. சபையை திட்டமிட்டு அவமதிக்கும் செயல் என்றும் எகிப்து கண்டனம் தெரிவித்துள்ளது