NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கனடாவில் அத்தியாவசிய மருந்து வகைகளுக்கு கடும் தட்டுப்பாடு!

கனடா நாட்டில் அத்தியாவசிய மருந்து வகைகளுக்கு கடும் தட்டுப்பாட்டு நிலைமை தொடர்ந்து நீடித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த மருந்துப் பொருட்களுக்கான தட்டுப்பாட்டு நிலை எதிர்வரும் ஆண்டு வரையில் நீடிக்கலாம் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.

அத்துடன், நாட்டின் சில பகுதிகளில் கூடுதலாக மருந்துப் பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டில் 18 வீதமான குடும்பங்கள், உணவுப் பாதுகாப்பின்மையை அனுபவித்துள்ளன என கனேடிய புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது.

கனடாவில் கடந்த ஆண்டு சுமார் 70 இலட்சம் கனேடியர்கள் பட்டினியுடன் போராடியதாக புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. இவ்விடயம் தொடர்பில் மேலும் கனேடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவிக்கையில், உணவுப் பாதுகாப்பின்மை தீவிரமான ஒரு பிரச்சினையாக காணப்படுகிறது.

ஏனெனில், இது பல்வேறு நோய் நிலைமைகள், மனநலப் பிரச்சினைகள், ஏனைய நோய்கள் மற்றும் தொற்றுநோய்களுடன் தொடர்புடையதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

சுகாதார கட்டமைப்புகள் மீது அதிகரிக்கும் அழுத்தம் உணவுப் பாதுகாப்பின்மையானது, மருத்துவமனையில் சேர்க்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகளை அதிகரிப்பதுடன், முன்கூட்டிய இறப்பிற்கும் வழி வகுக்கின்றது. அத்துடன் இந்த நிலைமைகள் நாட்டின் சுகாதார பராமரிப்பு கட்டமைப்பு மீதான அழுத்தங்களை அதிகரிக்க செய்கின்றது என்றது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles