NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஸ்ரீலங்கா கிரிக்கெட் அணி சர்வதேசப் போட்டிகளில் பங்குப்பற்ற வாய்ப்பு!

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டிற்கு ஐ.சி.சியினால் தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும், இலங்கை கிரிக்கெட் அணி பங்குபற்றும் சர்வதேச போட்டிகளுக்கும் ICCயின் போட்டிகளின் பங்கேற்புக்கும் தடை இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

ICC நிறைவேற்றுக்குழு இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

எனினும், ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்திற்கு சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் வழங்கப்படும் நிதியை, நிபந்தனைகளுக்கு மத்தியில் வழங்குவதற்கும் அதனை ஐஊஊயின் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், எதிர்வரும் ஆண்டு ஜனவரி மாதம் இலங்கையில் நடத்தப்படவிருந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கிண்ணப் போட்டியைத் தென் ஆபிரிக்காவில் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

Share:

Related Articles