NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

திடீரென போர் நிறுத்தத்தை அறிவித்த இஸ்ரேல்!

காசா இலக்குகள் மீதான தாக்குதல்களை சில நாட்களுக்கு நிறுத்த இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புக்கொண்டுள்ளது.

நெதன்யாகு மீதான தொடர்ச்சியான அழுத்தங்களுக்கு மத்தியில் காசா ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புதல் அளித்துள்ளது

அதன்படி, இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான சண்டையை 4 நாட்களுக்கு நிறுத்தவும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.

போர் நிறுத்த காலத்தில், காசா பகுதியின் அனைத்து பகுதிகளிலும் யாரையும் தாக்கவோ அல்லது கைது செய்யவோ கூடாது என்பதில் இஸ்ரேல் உறுதியாக உள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இஸ்ரேல் சிறைகளில் உள்ள 150 பலஸ்தீனிய பெண்கள் மற்றும் குழந்தைகள் விடுவிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், இதற்கு பதிலடியாக ஹமாஸால் கடத்தப்பட்ட 50 இஸ்ரேலிய பணயக்கைதிகள் விடுவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Share:

Related Articles