சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு, இலங்கை கிரிக்கெட் சபையால் அனுப்பப்பட்ட மூன்று கடிதங்கள் குறித்து ஆராயவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (22) தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று பாராளுமன்றத்தில் விடுத்த கேள்விக்கு பதிலளித்த போதே ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் தலையீடுகளின் காரணமாக இலங்கையில் கிரிக்கெட்டை இடைநிறுத்துமாறு நவம்பர் 6, 7 மற்றும் 9ஆம் திகதிகளில் இலங்கை கிரிக்கெட் சபையினால் ஐ.சி.சிக்கு மூன்று கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளது.
அந்த கடிதங்களை தனக்கு அனுப்பி வைக்குமாறு சஜித்திடம் கோரிக்கை விடுத்த ஜனாதிபதி, அவை தொடர்பாக பரிசீலிப்பதாக உறுதியளித்ததோடு மூன்று கடிதங்களையும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதாக சஜித் தெரிவித்துள்ளார்.
.