NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

CSK அணியில் இருந்து Dwaine Pretorius விலகல்!

IPL 2024 ஏலத்திற்கு முன்னதாக தென்னாப்பிரிக்காவின் முன்னாள் சகலதுறை ஆட்டக்காரரான டுவைன் பிரிட்டோரியஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியிலிருந்து விலகியுள்ளார்.

சிஎஸ்கே அணியின் அனுபவம் வாய்ந்த வீரர்களில் ஒருவரான டுவைன் பிரிட்டோரியஸ் ஞாயிற்றுக்கிழமை (26) இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள உணர்வுப்பூர்வமான பதிவு மூலம் இதை உறுதிப்படுத்தி உள்ளார்.

சிஎஸ்கே பிரிட்டோரியஸை அவரது அடிப்படை விலையான ரூ.50 இலட்சத்திற்கு IPL 2022 மெகா ஏலத்தில் எடுத்துள்ளது.

அந்த சீசனில் அவர் அணியின் வழக்கமான விளையாடும் லெவனில் ஒரு முகமாக இல்லாவிட்டாலும், அவரை அடுத்த சீசனில் 2023இல் அணி தக்கவைத்துக் கொண்டது.

இரண்டு சீசன்களிலும், பிரிட்டோரியஸ் 7 ஆட்டங்களில் மட்டுமே விளையாடி 9.52 என்ற எகொனமியில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். துடுப்பாட்டத்தில் 44 ஓட்டங்க‌ள் எடுத்தார்.

Share:

Related Articles