இந்திய T-20 அணியின் கேப்டனாக ரோகித் சர்மா விலகிய நிலையில் புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியா செயல்பட்டு வந்தார். இவர் காயம் காரணமாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் இருந்து விலகியுள்ளார்.
இதனால் இந்திய T-20 அணியின் கேப்டனாக யாரை நியமிப்பது என பிசிசிஐ தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.
இதனிடையே, ஒருநாள் உலகக்கோப்பை போட்டியில் சிறப்பாக செயல்பட்டதால், அடுத்த T-20 உலகக்கோப்பை தொடர் வரை ரோகித் சர்மாவே கேப்டனாக செயல்பட வேண்டும் என பிசிசிஐ விரும்புவதாக கூறப்படுகிறது.
ஆனால், 2022 ஆம் ஆண்டு T-20 உலகக்கோப்பையில் அரையிறுதியுடன் இந்திய அணி வெளியேறிய பின்னர், சர்வதேச T-20 போட்டிகளில் விளையாடப் போவதில்லை என ரோகித் சர்மா அறிவித்திருந்தார்.
அவரை மீண்டும் அணிக்கு கொண்டுவர பிசிசிஐ சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒருவேளை ரோகித் ஒப்புக்கொள்ளவில்லை என்றால், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரிலும் சூர்யகுமார் கேப்டனாக தொடர்வார் என்றும் கூறப்படுகிறது.