NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அமெரிக்காவின் அழைப்பை மறுத்த வடகொரியா!

ஒரு சுதந்திர நாட்டின் இறையாண்மை என்பது பேச்சுவாா்த்தையின் மூலம் சமரசம் செய்துகொள்ளக்கூடியது இல்லை. எனவே, அதற்காக அமெரிக்கா விடுக்கும் அழைப்பை ஒருபோதும் ஏற்க முடியாது என வடகொரிய அதிபரின் சகோதரி கிம் யோ-ஜாங் தெரிவித்துள்ளார்.

வடகொரியாவானது அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என அமெரிக்காவிலிருந்து விடுக்கப்பட்ட அழைப்பை நிராகரித்து அவர் வெளியிட்ட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அண்மையில் தனது உளவு செயற்கைக்கோளை வட கொரியா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதற்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இந்த செயற்கைகோள் விவகாரம் தொடர்பில் மீண்டும் பேச்சுவாா்த்தை நடத்த வட கொரியாவுக்கு அழைப்பு விடுத்து இருக்கலாம் என சுட்டிக்காட்டப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles