அத்தியாவசிய புனரமைப்பு பணிகளுக்காக முதற்கட்டமாக மூடப்பட்ட புதிய களனி பாலம் இன்று (04) காலை 6 மணி முதல் திறக்கப்பட்ட நிலையில், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டமாக மூடப்படவுள்ள திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி இரண்டாம் கட்டமாக டிசம்பர் 8 ஆம் திகதி இரவு 9 மணி முதல் டிசம்பர் 11 ஆம் திகதி காலை 6 மணி வரை பாலம் மீண்டும் மூடப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.
மூன்றாம் கட்டமாக, புதிய களனி பாலம் டிசம்பர் 15 ஆம் திகதி இரவு 9 மணி முதல் டிசம்பர் 18 ஆம் திகதி காலை 6 மணி வரை மூடப்படும்.
பாலம் மூடப்படும் காலப்பகுதியில் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளனர்.