மெக்ஸோவில் போதைப் பொருள் கடத்தல் குழுவுக்கும், கிராமத்தினருக்குமிடையில் ஏற்பட்ட மோதலில் 11 போ் உயிரிழந்துள்ளனா்.
அந்நாட்டின் தலைநகா் மெக்ஸிகோ நகருக்கு 130 கி.மீ. தொலைவில் உள்ள டெக்ஸ்கால்டிட்லன் கிராமத்தில் புகுந்த போதைப் பொருள் கடத்தல் குழுவை வேட்டைத் துப்பாக்கிகள் மற்றும் வீச்சரிவாளுடன் பொதுமக்கள் விரட்டிச் செல்லும் காட்சி சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த மோதலில் உயிரிழந்தவா்களில் 8 போ் பொதைப் பொருள் கடத்தல் கும்பலைச் சோ்ந்தவா்கள்; 3 போ் கிராமத்தினா் என்று போலீஸாா் கூறியுள்ளனர்.