NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கடந்த 2 நாட்களில் காணாமல் போன 12 நபர்கள் – பொலிஸ் தலைமையகம் தகவல்!

கடந்த இரண்டு நாட்களில் நாட்டின் பல பகுதிகளில் இருந்து நான்கு சிறுவர்கள் உட்பட 12 பேர் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதன்படி, பொரலஸ்கமுவ வெரஹெர பிரதேசத்தில் வசிக்கும் 15 வயது மாணவன், தர்மபுரம் பகுதியில் வசிக்கும் 16 வயது மாணவன், ஹட்டன் பொல்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 16 வயதுடைய ஒரு மாணவி மற்றும் பதினைந்து வயதுடைய சிறுமி ஆகியோர் காணாமல்போன சிறார்களில் அடங்குவர்.

காணாமல்போனவர்களில் நுவரெலியாவைச் சேர்ந்த 18 வயது யுவதியும், பொத்துவில் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய பெண்ணும், எடரமுல்லைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞரும் அடங்குகின்றனர்.

மேலும், நோர்வூட்டை சேர்ந்த 82 வயதான பெண், மொரட்டுவையை சேர்ந்த 75 வயதுடைய ஆண், பள்ளம பிரதேசத்தை சேர்ந்த 70 வயதான கூலித்தொழிலாளி மற்றும் கஹதுடுவ பிரதேசத்தில் வசிக்கும் 65 வயதுடைய ஆண் ஆகியோர் அடங்குகின்றனர். 

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles