NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மூடப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான தேங்காய் எண்ணெய் உற்பத்தி நிலையங்கள்!

உள்நாட்டில் உள்ள 1,500 தேங்காய் எண்ணெய் உற்பத்தி நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக தெங்கு மற்றும் தெங்கு சார்ந்த உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெய் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நாட்டின் வருடாந்த தேங்காய் எண்ணெய்க்கான கேள்வி, 2 இலட்சத்து 40 ஆயிரம் மெற்றிக் தொன்னாகும்.

இந்த நிலையில், ஒரு கோடியே 77 இலட்சம் கிலோகிராம் அளவில் தேங்காய் எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகின்றது.

இதற்காக 7891 மில்லியன் ரூபா செலவிடப்படுகிறது. இதனால் எமது தொழிற்துறை பாரியளவில் பாதிப்படைந்துள்ளது என குறித்த சங்கம் தெரிவித்துள்ளது.

Share:

Related Articles