NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முயற்சிக்கும் ஜப்பான்

ஆசிய நாடான ஜப்பான் வேறு நாடுகளுடன் இணைந்து இராணுவ உபரகரணங்களை உற்பத்தி செய்வது இதுவே முதல் முறையாகும்.

நாட்டின் வான்வழி பாதுகாப்பை உறுதிப்படுத்த அதிக திறன்கொண்ட போர் விமானங்களை தயாரிப்பது தவிர்க்க முடியாதது என ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் மினாரு கிஷாரா கூறியுள்ளார்.

ஜப்பானின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்கள் உருவாகிவரும் இந்த சந்தர்ப்பத்தில் இந்த புதிய போர் விமானத்தை உருவாக்குவது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒரு நாடு தனியாக ஒரு போர் விமானத்தை தயாரிக்க தொழில்நுட்பம் மற்றும் நிதி உதவிகள் தேவைப்படும். மூன்று நாடுகளும் இணைந்து இந்த போர் விமானத்தை உருவாக்குவது அப்படியான நெருக்கடிகளை குறைக்கிறது எனவும் ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மிட்சுபிஷி எஃப் – எக்ஸ் என அழைக்கப்படும் இந்த ஜெட் போர் விமானத்தின் தயாரிப்பு பணிகள் மூன்று நாடுகளில் உள்ள சர்வதேச நிறுவனங்களின் மேற்பார்வையில் நடைபெறும்

இதற்கு தற்போது ஜப்பான் தலைமை ஏற்றுள்ளதுடன் தலைமைப் பொறுப்பு சுழற்சி முறையில் மாற்றப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles