NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட்டுகளை வீழ்த்தி நாதன் லியன் சாதனை!

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது அவுஸ்திரேலிய வீரர் என்ற பெருமையை சுழல் பந்துவீச்சாளர் நாதன் லியன் பெற்றுள்ளார்.

பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இரண்டாம் இன்னிங்சில் நாதன் லியன் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் இந்த சாதனையை படைத்துள்ளார்.

இதன் மூலம் சர்வதேச போட்டிகளில் 500 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய எட்டாவது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ள நாதன் லியன், 500 விக்கெட்டுகளை வீழ்த்திய நான்காவது சுழல் பந்து வீச்சாளர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

பெர்த்தில் நடந்த முதல் டெஸ்டில் பாகிஸ்தானை 360 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியா வீழ்த்தியுள்ளது.

இந்தப் போட்டியில் இரண்டு அரைச்சதங்களை அடித்த மிச்சல் மார்ஷ் ஆட்டநாயகனாக தெரிவுசெய்யப்பட்டார்.

இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலியா அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

முதல் இன்னிங்சில் சகல விக்கெட்டுகளையும் இழந்து அந்த அணி 487 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

தனது பிரியாவிடை தொடரில் விளையாடும் டேவிட் வார்னர் இந்தப் போட்டியில் 164 ஓட்டங்களை குவித்தார். மிச்சல் மார்ஷ் 90 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

இதனையடுத்து தனது முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 271 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.

அந்த அணி சார்பில் இமாம்-உல்-ஹக் 61 ஓட்டங்களை அதிகப்பட்சமாக பெற்றுக்கொண்டார்.

அவுஸ்திரேலியா அணி சார்பில் நாதன் லியன் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

இதனையடுத்து இரண்டாம் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 5 விக்கெட்டுகளை இழந்து 233 ஓட்டங்களை பெற்றிருந்த போது ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது.

தொடர்ந்து 494 என்ற வெற்றி இலக்குடன் இரண்டாம் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி 89 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து தோல்வியை சந்தித்தது.

இதன் மூலம் 360 ஓட்டங்களை வித்தியாசத்தில் அவுஸ்திரேலியா வெற்றிபெற்றுள்ளது.

Share:

Related Articles