ஐஸ்லாந்தின் ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தில் உள்ள எரிமலை வெடித்து சிதற தொடங்கியுள்ளது.
கிரின்டாவிக் நகரத்தில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த எரிமலை நேற்று இரவு வெடிக்க தொடங்கி தீப்பிழம்பை வெளியேற்றி வருகிறது.
எரிமலை வெடிப்பு காரணமாக கிரின்டாவிக் பகுதியில் வசிக்கும் 4,000 பேர் வெளியேற்றப்பட்டு, பாதுகப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
சில நாட்களுக்கு முன்பு ரெய்க்ஜாவிக் தீபகற்பகத்தில் ஆயிரக்கணக்கான நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. எரிமலை வெடிப்புக்கு முன்பாக நிலநடுக்கம் ஏற்பட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.