இலங்கையில் 16 வயதுக்குட்பட்ட 5,000க்கும் மேற்பட்ட சிறுமிகள் நான்கு ஆண்டுகளுக்குள் சொந்த விருப்பத்தின் பேரில் தகாத செயற்பாடுகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அண்மைய கணக்கெடுப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது.
கண்டி தேசிய மருத்துவமனையின் மருத்துவ கலாநிதி பாலித பண்டார சுபசிங்க இதனை தெரிவித்துள்ளார்.
2018 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை நாடு முழுவதிலும் உள்ள 16 வயதுக்குட்பட்ட சிறுமிகள் தகாத செயற்பாடுகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக 6,307 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
அவற்றில் 5,055 முறைப்பாடுகள் குறித்த சிறுமிகளின் சம்மதத்துடன் தகாத செயற்பாட்டுக்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பானது என மருத்துவ கலாநிதி பாலித பண்டார குறிப்பிட்டுள்ளார்.
கண்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 17 பொலிஸ் பிரிவுகளில் கடந்த மூன்று வருடங்களாக 16 வயதுக்குட்பட்ட 132 சிறுமிகள் தகாத செயற்பாட்டுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்களில் பெரும்பாலானோர் அவர்களது சம்மதத்துடன் தகாத செயற்பாட்டுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் வைத்தியர் சுபசிங்க தெரிவித்துள்ளார்.