இங்கிலாந்து அணி மேற்கிந்திய தீவுகள் அணி சுற்றுப் பயணம் செய்துள்ள நிலையில் இரு அணிகளுக்கும் இடையில் 5 போட்டிகள் கொண்ட T20 கிரிக்கெட் தொடர் நடைபெற்றது.
முதல் இரண்டு போட்டிகளிலும் மேற்கிந்திய தீவுகள் வெற்றி பெற்றது. அடுத்த இரண்டு போட்டிகளில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரை 2-2 என சமன் பெறச் செய்தது.
5ஆவது மற்றும் கடைசி போட்டி நேற்று அதிகாலை நடைபெற்றது.
முதலில் விளையாடிய இங்கிலாந்து 19.3 ஓவரில் 132 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. சால்ட் அதிகபட்சமாக 38 ரன்கள் சேர்த்தார். லிவிங்ஸ்டன் 28 ரன்களும், மொயீன் அலி 23 ரன்களும் எடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் ரஸல், அகீல் ஹொசைன், ஹோல்டர் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் மொதியி 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் 133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களம் இறங்கியது. தொடக்க வீரர்கள் பிராண்டன் கிங் (3), சார்லஸ் (27), பூரன் (10) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஷாய் ஹோப் ஆட்டமிழக்காமல் 43 ரன்களும், ரூதர்போர்டு 30 ரன்களும் எடுக்க வெஸ்ட் இண்டீஸ் 19.2 ஓவரில் 133 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றி மூலம் T20 தொடரை 3-2 எனக் கைப்பற்றியது.