NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

டெங்கு கட்டுப்பாடு தொடர்பில் அறிவிக்க அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகம்…!

டெங்கு தடுப்பு மற்றும் டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டம் தொடர்பில் அறிவிப்பதற்கு அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டம் தொடர்பில் 011 7966366 எனும் இலக்கத்தை தொடர்பு கொள்வதன் மூலம் அறிவிக்க முடியும் என்றும் கூறப்படுகிறது.

கடந்த சில மாதங்களாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் குறித்த தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாளை (07)முதல் எதிர்வரும் 13ஆம் திகதி வரை விசேட டெங்கு தடுப்பு வாரமாக பிரகடனப்படுத்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சுதத் சமரவீர கூறியுள்ளார்.

மேலும், 2023 ஆம் ஆண்டில் மாத்திரம் 88,398 டெங்கு நோயாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

அதில் அதிகபட்சமாக கொழும்பு மாவட்டத்தில் 18,650 பேர் இனங்காணப்பட்டுள்ளதுடன், கடந்த வருடத்தில் 58 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles