(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
நியூசிலாந்தின் இளம் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தனது பூர்வீக குடிகளை போற்றும் வகையில் ‘மவோரி ஹக்கா’ என்ற நிகழ்ச்சி ஊடாக தனது முதல் உரையை ஆற்றிய காணொளி இணையத்தில் வைரலாகியுள்ளது.
மவோரி சமூகத்தைச் சேர்ந்த 21 வயதான மைபி கிளார்க், இளம் வயதில் பாராளுமன்றத்திற்கு தெரிவான நிலையில், 170 ஆண்டுகளில் மிக இளம் வயது எம்.பி என்ற வரலாற்றைப் படைத்தார்.
தனது கன்னி உரையில், அவர் தனது தொகுதியினருக்கு தனது அர்ப்பணிப்பை உறுதியளித்தார், ‘நான் உங்களுக்காக இறப்பேன். உங்களுக்காக வாழ்வேன்’ எனக் குறிப்பிட்டிருந்தார். அங்கு அவர் தனது முன்னோர்கள் மற்றும் வருங்கால குழந்தைகள் சார்பாக உணர்ச்சிகரமான உரையை நிகழ்த்தினார். பாரம்பரிய ‘ஹக்கா’ மற்றும் ‘போர் முழக்கம்’ செய்து பழங்குடி மக்களை தனது உரையில் கொண்டாடியிருந்தமையால் அவரது அந்த காணொளி உலகளவில் வைரலாகியுள்ளது.