NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

செந்தில் தொண்டமானுக்கு ‘Man of East’ என்ற பட்டம் வழங்கி கௌரவிப்பு!

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் சேவையை பாராட்டி “Man of East” என்ற பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, திருகோணமலையில் நேற்றைய தினம் (25)  சமத்துவ பொங்கல் விழா  இடம்பெற்றது.

இதில் கிழக்கு மாகாண ஆளுநர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டதுடன், அனைத்து மதத்தவர்களும் பொங்கல் வைத்து மகிழ்ந்தனர்.

கிழக்கில் உள்ள 14 சிவில் அமைப்புகள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் சேவையை பாராட்டி “Man of  East”என்ற பட்டத்தை ஆளுநருக்கு வழங்கி வைத்துள்ளனர்.

கிழக்கு மாகாணத்தில் பல வருட காலமாக பல ஆளுநர்கள் இருந்த போதிலும் அவர்கள் செய்யாத பல வேலைத் திட்டங்களை 5 மாத காலக்கட்டத்தில் செய்து முடித்தமைக்காகவும், ஆளுநரின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாணத்தில் நடைபெற்ற பொங்கல் விழா நிகழ்வு உலக சாதனை விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டமைக்காகவும் இவ்விருது வழங்கி வைக்கப்பட்டது.

மேலும், இந்நிகழ்வில் மாற்றுத் திறனாளிகளும் பொங்கல் வைத்து சமத்துவ பொங்கல் விழாவை சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles