தற்போது நிலவும் வறண்ட காலநிலை காரணமாக நாடளாவிய ரீதியில் தோல் நோய்கள் பரவி வருவதாகவும், இந்நிலைமை குழந்தைகளுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் சிறுவர் வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.
பகல் வேளையில் குழந்தைகள் விளையாடும் போது அதற்கு உகந்த இடத்தை வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், குழந்தைகளை தண்ணீர் மற்றும் திரவங்களை முறையாக குடிக்க அனுமதிக்கவில்லை என்றால், அவர்கள் வெப்ப அதிர்ச்சியால் பாதிக்கப்பட்டு உயிரிழக்க நேரிடும் என்றும் வைத்தியர் கூறியுள்ளார்.