இந்தோனேசியாவின் மேற்கு ஜாவாவில் பாந்துங் பகுதியில் சிலிவாங்கி ஸ்டேடியத்தில் நட்பு ரீதியிலாக நடந்த காற்பந்து போட்டியில், சுபாங் நகரை சேர்ந்த 35 வயதுடைய செப்டேன் ரஹார்ஜா என்ற வீரர் மீது மின்னல் கடுமையாக தாக்கியது.
அவர் மூச்சு விட்டபடியேயிருந்த நிலையில், சிகிச்சைக்காக கொண்டு சென்ற போதிலும், அவர் உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து வெளியாகிய காணொளியில், செப்டேனை மின்னல் தாக்கும் காட்சிகளும், உடனே அவர் விளையாட்டு களத்தில் விழும் காட்சிகளுமுள்ளன.
அம்மின்னல் ஸ்டேடியத்திற்கு 300 மீட்டர் உயரத்தில் இருந்து தாக்கியுள்ளதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் பகுப்பாய்வு தெரிவித்துள்ளது.
இந்தோனேசியாவில் கால்பந்து விளையாட்டின்போது வீரரை மின்னல் தாக்குவது என்பது முதன்முறையல்ல. கடந்த 2023-ம் ஆண்டு 13 வயதுக்கு உட்பட்டோருக்கான கிண்ணத்துக்காக கிழக்கு ஜாவாவில் நடந்த போட்டியின்போது, இளம் வீரர் ஒருவரை மின்னல் தாக்கியது.
இதனால், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து உடனடியாக வைத்தியசநக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், சிகிச்சை நடந்த 20 நிமிடங்களுக்கு பின்னர் சுயநினைவுக்கு திரும்பினார்.