NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பாகிஸ்தான் ஜனாதிபதி தோ்தல் திகதி அறிவிக்கப்பட்டது!

பாகிஸ்தான் ஜனாதிபதி தோ்தல் மாா்ச் 9ஆம் திகதி நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

அதன்படி, ‘பாகிஸ்தான் ஜனாதிபதி தோ்தல் மாா்ச் 9 அல்லது 10ஆம் திகதியில் தோ்தல் ஆணையத்தால் நடத்தப்படவுள்ளது.

பாகிஸ்தான் மேலவையில் மொத்தமுள்ள 100 உறுப்பினா்களில் 50 சதவீத உறுப்பினா்களின் பதவிக் காலம் முடிவடைவதற்கு இரண்டு நாட்கள் முன்பே அந்நாட்டு ஜனாதிபதி தோ்தல் நடைபெறவுள்ளது.

இத்தோ்தலில், ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமா் இம்ரான் கானின் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் (பிடிஐ) கட்சியின் ஆதரவு பெற்ற சுயேச்கைள் 101 இடங்களையும், நவாஸ் ஷெரீஃபின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் பிஎம்எல்-என் கட்சி 75 இடங்களையும், பிலாவல் புட்டோ ஜா்தாரியின் தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி (பிபிபி) 54 இடங்களையும் கைப்பற்றின.

நவாஸ் ஷெரீஃபின் சகோதரரான ஷாபாஸ் ஷெரீஃப் பிரதமராவதற்கு 6 கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. அதேபோல் அந்நாட்டின் ஜனாதிபதி தோ்தலுக்கு இக்கூட்டணியின் சாா்பில் பிலாவல் புட்டோ ஜா்தாரியின் தந்தையும் முன்னாள் பிரதமா் பேநசீா் புட்டோவின் கணவருமான ஆசிஃப் அலி ஜா்தாரி போட்டியிடுவாா் எனவும் அறிவிக்கப்பட்டது.

Share:

Related Articles