உங்கள் கையடக்கத் தொலைபேசி தண்ணீரில் விழுந்தபோது அது சார்ஜரில் இருந்தாலுா அல்லது வேறு எந்த சாதனத்தோடு இணைப்பில் இருந்தாலோ உடனடியாக அந்த இணைப்பை துண்டித்துவிட வேண்டும். இதனால் மின்சார பாதிப்புக்களை குறைக்க முடியும்.
உங்கள் ஐபோன் கனெக்டர் கீழே பார்த்தபடி இருக்குமாறு உங்கள் கைகளால் மெதுவாக தொலைபேசியை தட்டுங்கள். இப்படிச் செய்வதனால் உங்கள் தொலைபேசியிலிருக்கும் அதிகப்படியாக நீர் வெளியே வந்துவிடும்.
நல்ல காற்றோட்டமான இடத்தில் ஐபோனை உலர வையுங்கள். அப்போதுதான் அதற்குள் இருக்கும் ஈரப்பதம் உடனடியாக ஆவியாக வெளியேறும்.
ஐபோன் தண்ணீருக்குள் விழுந்தவுடன் உடனே பதட்டமடையாமல் கையடக்கத் தொலைபேசியை ஒன் செய்யவோ, அல்லது சார்ஜ் செய்யவோ வேண்டாம். ஈரம் காய்வதற்கு சுமார் அரை மணித்தியாலம் காத்திருக்க வேண்டும்.
போன் தண்ணீரில் விழுந்துவிட்டதால் அனை உடனே காயவைக்க வேண்டும் என்பதற்காக ஹீட்டரோ அல்லது ஹேர் ட்ரையரோ பயன்படுத்த வேண்டாம். இதன் அதிகப்படியான வெப்பநிலை ஐபோனின் உட்புற பாகங்களை பாதிக்கும். அதேபோல் காட்டன் துணி அல்லது பேப்பர் டவலைக் கன்வெர்ட்டருக்குள் நுழைப்பதாலும் பாதிப்புகள் அதிகரிக்கும்.
இத்தனை செய்தும் உங்கள் கையடக்கத் தொலைபேசி சரியாகாவிட்டால் சர்வீஸ் மையத்தை நாடுங்கள்.