பழமை மாறாது பல புதுமையான விடயங்களை தினந்தினம் கொண்டுவரும் தமிழ் FM வானொலி தனது 3ஆவது ஆண்டு நிறைவை இன்று கொண்டாடுகிறது.
புதிய டிஜிட்டல் உலகத்துக்கு ஏற்றுவாறு தன்னை தகவமைத்துக் கொண்டு ரசிகர்களுக்காக இன்னும் பல சுவாரஸ்யமான விடயங்களையும் சுமந்து 4ஆம் அகவையில் இன்று கால் பதிக்கிறது.
குறுகிய காலத்தில் இரசிகர்களின் மனதை வென்று இலங்கையின் முன்னணி வானொலியாக திகழும் தமிழ் எப் எம், ஒரே ஒரு தமிழ் யூத் ரேடியோவாக ரசிகர்களின் மனதைக் கவர்ந்துள்ளது.
தமிழ் FM, 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15ஆம் திகதி தனது சேவையை ஆரம்பித்து, இன்றுடன் மூன்று வருடங்களாக மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்து தமிழ் வானொலித்துறையில் கோலோச்சி பறக்கிறது.
எங்கும் எப்போதும் மக்கள் கேட்கும் ஒரே ஒரு வானொலியாக திகழ ஆரம்பித்துள்ள தமிழ் FM, தன்னுடைய தனித்துவத்தால் இன்று சர்வதேச அளவிலும் இரசிகர்கள் மனதை வென்று, டிஜிட்டல் தொழில்நுட்பத்திலும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது.
தமிழ் வானொலித்துறையில் டிஜிட்டல் உலகத்துடன் கைக்கோர்த்து புத்தம் புதிய மாற்றங்களுடன், இரசிகர்களை மகிழ்விக்கும் பலவிதமான விடயங்களை சுமந்துவரும் தமிழ் எப். எம் வானொலி இன்று சமூக ஊடகங்களில் அசைக்க முடியாத சக்தியாகத் திகழ்கிறது.
மிகச் சிறந்து ஆளுமைமிக்க வழிநடத்திலுடன், வானொலித் துறையை டிஜிட்டல் உலகத்துடன் இணைத்து இரசிகர்களை தொடர்ந்தும் மகிழ்விக்க இன்று 4ஆம் ஆண்டில் கால்பதிக்கிறது தமிழ் எப். எம் வானொலி.
99.5 மற்றும் 99.7 அலைவரிசைகளினுடாக சிறந்த நிகழ்ச்சிகளையும் உறுதிப்படுத்தப்பட்ட உண்மைச் செய்திகளையும் தமிழ் பேசும் மக்களுக்காக தொடர்ந்தும் தமிழ் எப். எம் வானொலி வழங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.