இலங்கையிலுள்ள 25 மாவட்டங்களில் அதிக செலவினைக் கொண்ட மாவட்டமாக கொழும்பு, குறைந்த செலவினைக் கொண்ட மாவட்டமாக மொனராகலை காணப்படுவதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய கொழும்பு மாவட்டத்தில் தனிநபரின் மாதாந்த செலவாக 18ஆயிரத்து 350 ரூபா செலவழிக்கப்படுகின்றது.
மொனராகலையில் ஒருவர் வறுமை நிலையை எட்டாமல், அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு மாதமொன்றுக்கு 16ஆயிரத்து 268 ரூபா தேவைப்படுவதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.