ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அனுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.எச். நந்தசேன (K. H. Nandasena) திடீர் சுகவீனம் காரணமாக இன்று காலமானார்.
அவர் தனது 69 ஆவது வயதில் காலமாகியுள்ளதாக குடும்ப வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளதோடு அனுராதபுரம் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவராகவும் இவர் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.