NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

உலகின் மிக வயதான நபர் காலமானார்!

தென் அமெரிக்க நாடான வெனிசுலாவின் டச்சிரா மாகாணத்தை சேர்ந்த 114 வயதுடைய ஜுவான் விசென்டே பெரெஸ் மோரா, கடந்த 1909 மே மாதம் 27ஆம் திகதி ஆண்டியன் மாகாணம் தச்சிரா நகரில் பிறந்தார்.

மேலும் கடந்த 2022ஆம் ஆண்டில் உலகின் உயிருடன் வாழும் மிக அதிக வயதான நபர் என்ற கின்னஸ் சாதனைக்கு இவர் சொந்தக்காராக மாறினார்.

இந்நிலையில், உடல்நலக்குறைவால் பெரெஸ் மோரா காலமானார். இவருக்கு 11 குழந்தைகள், 41 பேரக்குழந்தைகள் மற்றும் 30 கொள்ளுப் பேரக்குழந்தைகள் உள்ளனர்.

இவரது மறைவுக்கு ஜனாதிபதி நிகோலஸ் மதுரோ உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஜுவான் விசென்டே 1909 மே 27இல் ஆன்டியன் மாகாணம் தச்சிராவிலுள்ள எல் கோப்ரே நகரில் பிறந்தார். 10 குழந்தைகளில் அவர் 9ஆவது குழந்தையாக பிறந்தார்.

Share:

Related Articles