NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பலவான்களின் சமர்..

இலங்கை அச்சகத்தார் சங்கம் ஏற்பாடு செய்துள்ள ‘பலவான்களின் சமர்’ என அழைக்கப்படும் பிரின்டர்ஸ் சிக்சஸ் 2024 கிரிக்கெட் போட்டி கொழும்பு 7இல் அமைந்துள்ள N.C.C மைதானத்தில் எதிர்வரும் சனிக்கிழமை 06ஆம் திகதி காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகி மாலை இறுதிப் போட்டியுடன் நிறைவடையும்.


இலங்கை அச்சகத்தார் சங்கத்தினால் 11ஆவது தடவையாக நடத்தப்படும் இப்போட்டியில் சங்கத்தில் அங்கம் வகிக்கும் அச்சக நிறுவனங்களைப் பிரதிதித்துவப்படுத்தும் 4 மகளிர் அணிகளும் 52 ஆடவர் அணிகளும் பங்குபற்றுகின்றன.


அச்சுத்துறையைச் சேர்ந்த அணிகள் பங்குபற்றும் இந்த விறுவிறுப்பான போட்டியை கண்டுகளிக்க வருமாறு அனைவரும் அழைக்கப்படுகின்றனர்.
இந்தப் போட்டியில் சம்பியனாகும் அணிக்கு வெற்றிக் கிண்ணத்துடன் 100,000 ரூபா ரொக்கப்பணப் பரிசும் 2 ஆம் இடத்தைப் பெறும் அணிக்கு 50,000 ரூபா ரொக்கப்பணப்பரிசும், சிறந்த துடுப்பாட்ட வீரர், சிறந்த பந்துவீச்சாளர், இறுதி ஆட்டநாயகன் மற்றும் தொடர் ஆட்டநாயகன் ஆகியோருக்கு தலா 10,000 ரூபா ரொக்கப் பணப்பரிசும் வழங்கப்படவுள்ளது.


இதேவேளை, அன்றைய நாளில், பப்பரே (Papare) வாத்திய குழுவினரின் இசைகளும், DJ பாடல்களும் மைதானத்தில் கூடும் சிறுவர் முதல் பெரியோர்வரைஅனைவரையும் பரவசத்தில் ஆழ்த்தவுளளது.


சிறுவர்களுக்கான பிரத்தியேக விளையாட்டுப் பகுதிகளும் உணவு மற்றும் குளிர்பான நிலையங்களும் போட்டியை கண்டுகளிக்க வருவோரை மகிழ்ச்சிப்படுத்த காத்திருக்கின்றன.


போட்டியில் பங்குபற்றும் நிறுவனங்களின் ஊழியர்களுக்கான இலவச கண் பரிசோதனையும் அன்றைய தினம் நடத்தப்படவுள்ளது.
அச்சகத்தார் சமூகத்தைச் சேர்ந்தவர்களுடன் பழகுவதற்கும் மகிழ்ச்சி, உற்சாகம் நிறைந்த பொழுதை அனுபவிக்கவும் இது ஒரு சிறந்த வாய்ப்பாகும்.


இந்த நிகழ்வை வெற்றியடையச் செய்வதற்கு அவர்களின் பங்களிப்புகள் முக்கிய பங்கு வகிப்பதுடன் அச்சகத்தார் சமூகத்திற்கான அர்ப்பணிப்பையும் இது எடுத்துக்காட்டுகின்றது.


பிரின்டர்ஸ் சிக்ஸஸ் 2024 நிகழ்வு, அச்சகத்தார் சமூகத்திற்குள் ஒற்றுமை மற்றும் நட்புறவை வளர்ப்பதற்காக முன்னெடுக்கப்படுகின்றது. தொழில் நிபுணர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு போட்டி, பொழுதுபோக்கு மற்றும் சமூக உணர்வை இந்த நிகழ்வு ஏற்படுத்துகின்றது.
இலங்கையில் அச்சுத் தொழிலுக்கு ஆதரவாக இலங்கை அச்சகத்தார் சங்கம் உறுதியுடனும் அர்ப்பணிப்புடனும் செயற்பட்டுவருகிறது.


மேலும் தனது உறுப்பினர்களுக்கு பயிற்சித் திட்டங்கள் மற்றும் தொழில்துறை பயிற்சிகள் உட்பட முக்கிய ஆதரவு மற்றும் வளங்களையும் சங்கம் வழங்கிவருகிறது.
அச்சகத் தொழில்துறை எதிர்கொள்ளும் சவால்களை சமாளிக்கும் வகையிலும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதில் அரசாங்கத்துடன் சங்கம் இணைந்து செயற்பட்டுவருகிறது.


நாட்டில் செழித்து வரும் அச்சுத் தொழிலை வளர்ப்பதில் இலங்கை அச்சகத்தார் சங்கம் எடுத்துவரும் முயற்சிகளானது அதன் பகிரப்பட்ட அர்ப்பணிப்பை பிரதிபலிக்கின்றன.
இதேவேளை, பகிரங்க குலுக்கள் மூலம் அணிகளுக்கான போட்டி அட்டவணை தீர்மானிக்கப்பட்டது.


போட்டி தொடர்பான விபரங்களும், வெற்றிக் கிண்ணத்தை இலங்கை அச்சகத்தார் சங்கத் தலைவரிடம் கையளிக்கும் நிகழ்வும் 3 ஆம் திகதி புதன்கிழமை கொழும்பு – 3 இல் அமைந்துள்ள Victoria Masonic Temple Hall இல் இடம்பெற்றது.
பிரின்டர்ஸ் சிக்ஸஸ் 2024 தொடர்பான மேலதிக விபரங்களை அறிந்துகொள்ள 0777-374619 என்ற தொலைபேசி இலக்கத்தில் லெனார்ட் எட்வேர்டை தொடர்புகொள்ளவும்.

Share:

Related Articles