NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அஸ்வெசும திட்டத்தின் கீழ் மேலும் நிவாரணம் வழங்க தீர்மானம் !

மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை பரிசீலித்து மேலும் 182,140 குடும்பங்கள் நிவாரணம் பெறத் தகுதி பெற்றுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

அவர்களுக்கான நிலுவைத் தொகைகள் உட்பட அனைத்து கொடுப்பனவுகளும் இந்த மாதம் 18 ஆம் திகதிக்குள் கணக்கிடப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

அதன்படி, தற்போது 1,854,000 பேர் நன்மைகளைப் பெற்று வருவதாகவும், அதற்காக அரசாங்கம் 58.5 பில்லியன் ரூபாவைச் செலவிடுவதாகவும் அவர் தெரிவிதுள்ளார்.

இதேவேளை, நன்மைகளைப் பெறுவதற்கான சகல தகுதிகளையும் பூர்த்தி செய்த சுமார்இரண்டு இலட்ச்சம் குடும்பங்கள் தமது வங்கிக் கணக்குகளைத் திறந்து அது தொடர்பான தகவல்களைப் புதுப்பிக்கத் தவறியுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

Share:

Related Articles