NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

படுக்கையில் எரிகாயங்களுடன் உயிரிழந்த நபரின் சடலம் மீட்பு!

உடவலவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் வீடொன்றின் படுக்கையில் எரிகாயங்களுடன் உயிரிழந்த நபரின் சடலம் ஒன்று நேற்று முன்தினம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மரணத்தில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாக உயிரிழந்தவரின் மகன் மற்றும் மனைவி கைது செய்யப்பட்டதாக உடவலவ பொலிஸார் தெரிவித்தனர்.

உடவலவ பகுதியை சேர்ந்த 48 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே உயிரிழந்துள்ளார்.

இறந்தவரின் மனைவி, வீட்டுக்கு முன்பாக கடை நடத்தி வருவதாகவும், அன்றைய தினம் அதிகாலை அந்த கடையில் இருந்த பொருட்களை கணவர் சேதப்படுத்தியதாகவும், மனைவி பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

அதன் பின்னர், குறித்த நபர் தனது வீட்டின் அறைக்குள் சென்று தனது உடலில் பெற்றோலை ஊற்றி தீ வைத்துக் கொண்டதாக அவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் படுக்கையில் கிடந்ததுடன், படுக்கையின் மெத்தை மற்றும் தலையணை எரிந்து நாசமானது.

தீயினால் அறை சேதமடையவில்லை எனவும், அறையின் தரையில் லைட்டர், மண்ணெண்ணெய் கொள்கலன் இருந்ததாகவும், மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அம்பிலிபிட்டிய தலைமையக பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவு புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

மரணம் சந்தேகத்திற்குரியது என உயிரிழந்தவரின் சகோதரி ஒருவர் நீதவான் முன்னிலையில் தெரிவித்தார். 

Share:

Related Articles