உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் ஐந்தாம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு கொச்சிக்கடை தேவாலயத்தில் இருந்து கட்டுவாப்பிட்டி தேவாலயம் வரையான ஊர்வலம் நேற்று நள்ளிரவு இடம்பெற்றது .அதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட நினைவேந்தல் நிகழ்ச்சிகளின் தொடர் நேற்று பிற்பகல் கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இடம்பெற்ற விசேட ஆராதனையுடன் ஆரம்பமானது. இதனை நினைவு கூறும் ஊர்வலமானது, கொச்சிக்கடை தேவாவலயத்தில் இருந்து மட்டக்குளி பாலம், வத்தளைச் சந்தி ஹெகித்த வீதியூடாகவும், அங்கிருந்து நீர்கொழும்பு கொழும்பு பிரதான வீதியூடாக கட்டுவாப்பிட்டி தேவாலயம் நோக்கியும் பயணிக்கப்பட்டது.