கொழும்பு – பன்னிபிட்டிய, லியனகொட பிரதேசத்தில் உள்ள மர ஆலையொன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் குறித்த ஆலை முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளது.
இன்று (22) அதிகாலை 2.30 அளவில் இவ்வாறு தீ பரவியதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரதேசவாசிகள், நகரசபையின் மூன்று தீயணைப்பு வாகனங்கள் மற்றும் தெஹிவளை நகரசபையின் தண்ணீர் பவுசர்களின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
மின்கசிவு காரணமாக தீப்பரவல் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இந்த விபத்தில் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை எனவும் சொத்துக்கள் பாரியளவில் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.