ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மீது தாம் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளதாக அக்கட்சியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சி.தொலவத்த தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லை புத்ததாச விளையாட்டரங்கில் நடைபெற்ற நியூ அலையன்ஸ் கொழும்பு மாவட்ட முன்பள்ளி ஆசிரியர் பக்மஹா விழாவின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கட்சிக்காக தாம் கடுமையாக உழைத்த போதிலும் இதுவரை கட்சியில் பொறுப்பு எதுவும் வழங்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
எவ்வாறாயினும், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதாகவும், வேறு எந்த வேட்பாளரும் பார்வையில் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.