NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பேருந்து கவிழ்ந்து 4 பேர் பலி.

தமிழ் நாட்டின் சேலம் மாவட்டம் ஏற்காடு பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். நேற்று மாலை 6.00 மணியளவில் ஏற்காடு பேருந்து நிலையத்தில் இருந்து சேலம் நோக்கி பயணித்த பேருந்து ஏற்காடு மலையின் 11 ஆவது கொண்டை ஊசி வளைவில் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.மாலை நேரம் என்பதால் பேருந்தில் அதிகப்படியான பயணிகள் இருந்ததாக கூறப்படுகிறது. மேற்படி விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share:

Related Articles